• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதலிக்க நேரமில்லை படத்தின் லேவண்டர் நேரமே பாடல் வெளியானது

சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

காதலிக்க நேரமில்லை படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி' சில வாரங்களுக்கு முன் வெளியானது. ஏ.ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான 'லாவண்டர் நேரமே' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஒரு மெலடி பாடலாக அமைந்துள்ளது.
 

Leave a Reply