• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புஷ்பா 2 படத்தின் KISSIK பாடலின் வீடியோ வெளியானது

சினிமா

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது.

'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், இதுவரை இந்தியன் சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகம் என்று தகவல் வெளியானது. தற்போது வரை திரைப்படம் உலகளவில் 1500 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் மிக பிரபலமான கிஸிக் பாடலின் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலில் ஸ்ரீலீலா மிகவும் கவர்ச்சியாக நடனாமாடியுள்ளார். பாடல் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

Leave a Reply