கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ருடோவுடனான உறவை உறுதிப்படுத்திய பாப் பாடகி
கனடா
கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோயரை கடந்த 2023-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
இதற்கிடையே அமெரிக்காவின் பிரபல பாட் பாடகி கேத்தி பெர்ரியுடன் ஜஸ்டின் ட்ரூடோ டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் வெளியாகின. ஆனால் அதுபற்றி இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவுடனான உறவை இன்ஸ்டகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு கேத்தி பெர்ரி உறுதிப்படுத்தி உள்ளார். அவர்கள் இருவரும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை கேத்தி பெர்ரி வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் உள்ள வீடியோவில் இருவரும் ஒன்றாக உணவு உண்பதும், அவர்கள் உற்சாகமாக நேரத்தை செலவிடும் தருணங்களும் உள்ளன. இதற்கு டோக்கியோ சுற்றுப்பயண நேரங்கள் என்று கேத்தி பெர்ரி தலைப்பிட்டுள்ளார்.





















