• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடா

கனடாவின் அலாஸ்கா மற்றும் யூகான் பிராந்தியத்தின் எல்லை அருகிலுள்ள தொலைதூர பகுதியில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரிக்டர் அளவுக்கோலில் 7.0 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிச்சரிதவியல் ஆய்வுமையம் கூறியுள்ளது.

எனினும், சுனாமி எச்சரிக்கை எதும் வெளியிடப்படவில்லை என்றும், மேலும் சேதம் அல்லது இழப்பு பற்றிய உடனடி தகவல்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் ஜூனோவிலிருந்து சுமார் 230 மைல்கள் (370 கிலோமீட்டர்கள்) வடமேற்கிலும், யூகானின் வைட்ஹார்ஸிலிருந்து 155 மைல்கள் (250 கிலோமீட்டர்கள்) மேற்கிலும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கனடாவின் இயற்கை வளங்கள் துறையின் நில அதிர்வு நிபுணர் ஆலிசன் பட் தெரிவித்ததாவது,

'' யூகானில் இந்த நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி மலைப்பாங்கானதும், மக்கள் குறைவாக வசிக்கும் இடமுமாகும்.

கட்டிடங்களுக்கான கட்டமைப்பு சேதம் எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை.” என கூறியுள்ளார்.
 

Leave a Reply