• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை

இலங்கை

2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களை வாங்கியது தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணையமே கோரியதால், அவர்களை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இன்று (10) உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்தபோது, ​​கிரேக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட திறைசேரி பத்திரங்களை தெரிந்தே வாங்கியதாகவும், அதன் மூலம் அரசுக்கு ரூ.18.4 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

மத்திய வங்கி விதிமுறைகள் மற்றும் நிதி அறிக்கையிடல் விதிமுறைகளுக்கு இணங்க, மேற்படி பிணைமுறி பரிவர்த்தனை சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply