• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிசம்பர் முதல் எட்டு நாட்களில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை

2025 டிசம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 50,222 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.

SLTDA வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 10,453 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 21% ஆகும். 

மேலும் ரஷ்யாவிலிருந்து 5,420 பேரும், ஜெர்மனியிலிருந்து 4,822 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,823 பேரும், பிரான்ஸ் நாட்டிலிருந்து 2,627 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கிடையில், டிசம்பர் மாதத்திற்கான அண்மைய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,153,815 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், இந்தியாவிலிருந்து 485,249 பேர், இங்கிலாந்திலிருந்து 195,565 பேர், ரஷ்யாவிலிருந்து 164,013 பேர், ஜெர்மனியிலிருந்து 136,081 பேர், சீனாவிலிருந்து 124,298 பேர் மற்றும் பிரான்சிலிருந்து 103,307 பேர் வந்துள்ளனர் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply