எம்.ஜி.ஆர்.பற்றி.சுவையான.சிறு.குறிப்புகள்
சினிமா
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
திருமணம்_அழைப்பு
எம்.ஜி.ஆர் தன் அண்ணனுடன் வாழ்ந்தபோது யாராவது திருமணம் என்று அழைப்பு வைத்தால் அவர் தன் அண்ணனிடம் பணத்தைக் கொடுத்து அவர் கையால் பெற்றுக்கொள்ளுங்கள் என்பார். அவர் உள்ளேயே இருந்துவிடுவார். அண்ணன் சக்ரபாணி வந்து பணம் கொடுப்பார். நடிகர் சந்திர பாபு துணை இயக்குநர் இடிச்ச புளி செல்வராஜ் வசனகர்த்தா ரவீந்தர் போன்றோர் எம்.ஜி.ஆர் கையால் பெற முடியவில்லையே என்று வருந்தியதுண்டு. அதற்கு எம்.ஜி.ஆர் எனக்குப் பிள்ளையில்லை. என் அண்ணன் பிள்ளைகுட்டிக்காரர் அதனால் அவர் கையால் உனக்குத் தருகிறேன் என்று சமாதானம் சொல்வார். தனக்குப் பிள்ளையில்லாவிட்டாலும் தன்னைத் திருமணத்துக்கு அழைப்பவர்கள் பிள்ளை பாக்கியம் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.
நிஜத்திலும் படத்திலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல பழக்க வழக்கங்களும் நல்ல எண்ணமும் இருந்ததால் அவரை இன்று வரை மக்கள் மறக்காமல் நினைவில் வைத்துப் போற்றுகின்றனர்.....






















