ரஷிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலத்த வெடிப்பு சத்தங்கள் கேட்டது. தீ மளமளவென்று பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்தால் மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடினார்கள்.
ஆனால் மார்க்கெட் கட்டிடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.





















