ஜப்பான் கடலில் 100 மீட்டர் அகலத்தில் உருவான புதிய தீவு
ஜப்பானின் இவோடோ தீவுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் ஒரு புத்தம் புதிய எரிமலைத் தீவு கடலின் மேற்பரப்பில் தோன்றியுள்ளது.
2023-ன் பிற்பகுதியில் புதிய எரிமலைத் தீவு பிறந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது 'இவோஜிமா' என்ற பெயரில் மிகக் கடுமையான போர்களைச் சந்தித்த இடமாகும்.
கடலுக்கு அடியில் இருந்த எரிமலை உயிர்பெற்று கர்ஜித்தபோது, ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் நில அதிர்வுகளை உணர்ந்தது.
நவம்பர் மாதத் தொடக்கத்தில், பிறந்த இந்த புதிய தீவு சுமார் 100 மீட்டர் அகலம் கொண்டதாகவும், அலைகளுக்கு மேலே பல மீட்டர் உயரத்திற்கு உயர்ந்ததாகவும் அளவிடப்பட்டது. அது மிதக்கும் பழுப்பு நிறப் பியூமிஸ் கற்களால் சூழப்பட்டு இருந்தது
இவோடோ தீவுடன் இணைந்து பெரிய நிலப்பரப்பாக மாறலாம். அல்லது முற்றிலும் மறைந்து போகலாம்.
ஆனால், இப்போதைக்கு இந்த அமைதியற்ற கிரகத்தில், எரிமலைகள் கண்முன்னே எப்படிப் புதிய நிலப்பரப்பை உருவாக்குகின்றன என்பதைக் கண்கூடாகக் காணும் ஒரு அரிய வாய்ப்பை இந்த நிகழ்வு அளித்துள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.






















