மறக்க முடியாத வானொலி வரிகள்
சினிமா
அமெரிக்காவில் புறூக்கிலின் மருத்துவமனையிலிருந்து சென்னை விமான நிலையத்தில் இறங்குகிறார் வாத்தியார். வானொலியில் அவரது வருகையை 'இங்கு தான் ஒரு மனிதன் ஆரம்பமாகிறான்' என அறிவிக்கிறார்கள். ஆம் !! டாக்டர்கள் எவ்வளவோ சொல்லியும் மக்களோடு மக்களாக மீண்டும் இரண்டறக் கலந்து இறுதி வரை வாழ்ந்தவர்தான் வாத்தியார்.
'தங்கத்தை தோண்டி எடுத்து தான் பார்த்திருப்பீர்கள்'. ஆனால் முதல் தடவையாக தங்கம் புதைக்கப்படுகிறது என்று வானொலி வாத்தியாரின் இறுதி நிமிடத்தை அறிவிக்கிறது.
வாத்தியார் மறைந்து 39 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆனால் இந்த வானொலியில் கேட்ட வரிகள் இன்றும் மறக்க முடியாதிருக்கிறது.
புரட்சி தலைவர், எங்க வீட்டுப் பிள்ளை என்ற சொக்க தங்கம் நம்முடைய எம்.ஜி.ஆர் போல் இனி ஒருவரும் இல்லை. கனடாவில் அரச அங்கீகாரத்துடன் செந்தியின் "தமிழன் வழிகாட்டி " பொன்மனச் செம்மல்" நினைவாக தபால் முத்திரை வெளியிட்டிருந்தது .






















