• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் திரையுலகில் நுழைவதற்கு முன்னர் ஆரம்ப காலத்தில்

சினிமா

முதலில் எழுதிய கதை Mr.Xன் விஜயம்' என்ற நாடகத்தின் கதைதான், இதை என் நண்பர்கள் 'ஆஹா ஓஹோ' என்று பாராட்டினார்கள்.

நானும், அடடா நாம நல்லா எழுதறோம்னு பிரமாதமாக ஒரு சாதனை செய்து விட்டதாகத்தான் நினைத்து காலரைத் தூக்கி விட்டுக் கொண்டேன்.

அதே டைப்பில் சினிமா உலகத்தையும் ஒரு பிடி பிடித்து விடலாம் என்று சென்னைக்கு ரயிலேறினேன். இங்கே வந்து பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி, பல சினிமாக்கள் பார்த்து, சினிமாக் கதை நிலவரங்களைப் பார்த்த போதுதான் எனக்கு, 'நாம் எவ்வளவு சுமாராக, அமெச்சூரிஷாக ஒரு கதை எழுதி வைத்துக் கொண்டு கர்வப் பட்டிருக்கிறோம்' என்று புரிந்தது.

அந்தத் தெளிவு ஏற்பட்டதுமே இரண்டு விஷயங்கள் எனக்கு உறைத்தன.

ஒன்று, 'நாம் சினிமாவில் இடம் பெற இப்போது மிக பலவீனமாக இருக்கி றோம்' என்பது.

இரண்டாவது, 'இதற்காக பின்வாங்கி விடக் கூடாது' என்பது.

நான் சொன்னவற்றை ரசிகர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். நான் பலவீனமாக உள்ளேன் என்று குறிப்பிட்டேனே தவிர, இதைத் தெரிந்து கொண்டதுதான் என் பலமும் கூட இவ்வளவுசாதாரணமான கதை எழுதும் நாம்... ஸ்ரீதர், கே.எஸ்.ஜி., பாலச்சந்தர் போன்றோர் அளவு உயர முடியுமா?

இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்ட போது, மனதுக்குள் கூனிக் குறுகினேன். பிறகு தகுந்த பயிற்சி சிறந்த ஆசிரியர்கள் என்று தயார் படுத்திக்கொண்டு வந்து திரையுலகில் நுழைந்தேன்.
(ஒரு பேட்டியில் இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளர் இயக்குநரான நடிகர் கே.பாக்யராஜ்)

இராம ஸ்ரீநிவாஸன் ❤️🇮🇳🙏
 

Leave a Reply