• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிசம்பர் 23 ஆம் திகதி அதாவது நாளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு இன்று (22) உறுதிபடுத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவையும் சந்திப்பார் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இந்தப் பயணம் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

மேலும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை நிவர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஆப்ரேஷன் சாகர் பந்து பின்னணியில் முன்னெடுக்கப்படுகிறது.
 

Leave a Reply