• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலச்சந்தர் படவிழாவில் எம்.ஜி.ஆர். மீதான பழி இன்று நீங்குகிறது.!

சினிமா

இதுவரை வெளிவராத உண்மைகள்!
'இதயம் பேசுகிறது' மணியன் 'இதயவீணை' படத்திற்கு பின் துவங்கிய படம் கே.பாலசந்தர் இயக்கத்தில் 'சொல்லத் தான் நினைக்கிறேன்' . 7.12.73 - ல் வெளியான படம் இது.
இந்த படத்தின் துவக்க விழாவில் மணியனின் அழைப்பின் பேரில் (அ.தி.மு.க. தொடங்கிய பின்) எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். படத்தில் ஜெயசித்ரா இணையாக மோகன் (பூனா திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்) நடிப்பதாக அவரும் வந்திருந்தார். ஆனால் படம் தொடங்கிய போது அவருக்கு பதில் சிவக்குமார் நடித்தார். அதற்கு ஊடகங்கள் சிலவற்றில் சொல்லப்பட்ட காரணம் தெரியுமா?
"எம்.ஜி.ஆர்., துவக்க விழாவிற்கு வந்த போது அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். ஆனால் நடிகர் மோகன் மட்டும் அமர்ந்திருந்தார். அவருக்கு இந்த சினிமா உலக சங்கதிகள் தெரியாது. அதனால் எம்.ஜி.ஆருக்கு மரியாதை தரவில்லை என்று படத்திலிருந்து தூக்கப்பட்டார் " என்று எழுதியிருந்தனர். இது நீண்ட நாட்களாக என் நினைவில் இருந்தது. மோகன் பூஜையில் இருக்கும் படம் 'பொம்மை' இதழிலும், மற்ற இதழ்களிலும் வெளிவந்திருந்தது.
பாலந்தரிடம் பழகிய சமயம் எப்படி கேட்பது என்ற தயக்கம். ஆனால் இன்று அவரது நினைவு நாளில் அதற்கு விடை கிடைத்தது.
பாலச்சந்தரிடம் பணிபுரிந்த சிலரிடம் பேசிய போது, "மோகன் மிக உயரமானவர். ஜெயசித்ராவுக்கு அவர் பொருத்தமில்லை. சில காட்சிகள் படமாக்கப்பட்ட போது ஜெயசித்ரா உயரத்திற்கு ஸ்டூல் போட்டு நடிக்க வேண்டியதாயிற்று. தமிழில் தொடர்ந்தால் போல் வசனம் பேசவும் மோகனுக்கு வரவில்லை. பாலச்சந்தர் தடுமாறி போனார். அடிக்கடி கோபம் ஏற்பட்டது. அதனால் படம் பாதிக்கும் என்று மோகனை நீக்கி விட்டு சிவக்குமாரை நடிக்க வைத்தார். இது தான் நடந்தது" என்று பதில் வந்தது.
பதில் தந்தவர்களுக்கு நன்றி.

கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி' தொடங்கி எம்.ஜி.ஆர். பற்றிய கட்டுக்கதைகள் இன்னும் உலா வருகின்றன. அதற்கு கடுமையான பதிலடியும், அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைப்பதற்கும் 'இதயக்கனி' முயற்சிக்கும்.
பாலச்சந்தர் நினைவு நாளில் அவர் என்னை இப்படி பதிவு போட வைத்து விட்டார் என்று நினைக்கிறேன்.

 

Ithayakkani S Vijayan

Leave a Reply