• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டித்வா சூறாவளி நிவாரண உதவித்தொகை - கொழும்பு மாவட்டத்தில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இலங்கை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையைப் பெறுவதற்காக கொழும்பு மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1,138 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை வெளிப்படுத்தினார்.

குறித்த கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராச்சி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கொழும்பு மாவட்டச் செயலாளர்  கூறுகையில், “டிசம்பர் 2ஆம் திகதி நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 71,193 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்குவதற்கான செயல்முறையில் தற்போது 3,192 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply