விஜய் குரலில் நாளை வெளியாகும் ஜன நாயகனின் 3-வது சிங்கிள்
சினிமா
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி உள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களான "தளபதி கச்சேரி", 'ஒரே பேரே வரலாறு' ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் 3-வது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அனிருத் இசையில் தளபதி விஜய் பாடியுள்ள 'செல்ல மகளே...' பாடல் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






















