• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் வெடிகுண்டு அச்சுறுத்தல்

இலங்கை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானபொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கட்டார் டோஹா நகரில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான போயிங் 787 என்ற விமானம் 245 பயணிகள் உள்ளடங்கலாக 12 பணியாள்ரகளுடன் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த நிலையில் குறித்த விமானத்திற்குள் வெடி குண்டுகள் காணப்படுவதாக விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது

குறித்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக இந்த விமானத்தில் வெடிபொருட்கள் உள்ளதாக விமான நிலைய முகாமையாளருக்கு மின்னஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது

எனினும் குறித்த விமானத்தில் வருகைதந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

விமானம் தரையிறக்கப்பட்டதன் பின்னர் விமானப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசேட பயிற்சிபெற்ற மோப்பநாய்களை பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.

மின் அஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்

எனினும் குறித்த விமானத்தில் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானபொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply