பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீரமானம்
இலங்கை
அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் எதிர்வரும் 30ஆம் திகதி ஒருநாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
குறிப்பாக பீடாதிபதி மற்றும் திணைக்களத் தலைவர் நியமனம் தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களை உடனடியாக திரும்பப் பெறாவிடின், தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தின் உபதலைவர் எம்.ஏ.எம்.சமீம் அறிவித்துள்ளார்.






















