• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய கொள்கை நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இலங்கை

எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே இன்று (30) மதியம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply