நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்
சினிமா
கேரள மாநிலத்தின் முன்னணி நடிகரான மோகன்லாலின் தாயார் சந்தானாகுமாரி அம்மா (90) வயது மூப்பு தொடர்பான நோயால் இன்று காலமானார். நோய் பாதிப்பால் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். இவர் காலமானபோது, மோகன்லால் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது.
மோகன்லால் தாயார் மறைவு செய்தியை அறிந்த அவரின் நெருங்கிய நண்பர்களாக மம்மூட்டி மற்றும் கேரள சினமா திரையுலக பிரபலங்கள் அவரது வீட்டிற்கு சென்று, அஞ்சலி செலுத்தினர். மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் கடந்த சில வருடத்திற்கு முன் காலமானார். அவர் சீனியர் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.
சினிமா துறையில் தன்னுடைய வெற்றிக்கு தந்தை மற்றும் தாயின் உத்வேகம்தான் காரணம் என அடிக்கடி கூறுவார்.
கேரள மாநில முதல்வர் பினராயி விஜய், சட்டசபை சபாநாயகர் ஏ.என். ஷாம்சீர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.























