துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு மாதம் நீடிப்பு
இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி வரை ஒரு மாதத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சு,
உரிமம் புதுப்பித்தல்கள் 2025 செப்டம்பர் 1, முதல் 2025 டிசம்பர் 31, வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டதாகக் கூறியது.
அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குப் பின்னர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக, 2026/2027 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு புதுப்பித்தல் ஜனவரி 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாமதக் கட்டணங்களை விதிப்பதும், அடுத்தடுத்த புதுப்பிப்புகளுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதும் பாதுகாப்பு அமைச்சின் நோக்கமாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.























