• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான நிலையத்தின் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற புத்தா ஏர் விமானம்

நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 50 பயணிகளுடன் புத்தா ஏர் விமானம் புறப்பட்டது. பத்ராபூர் விமான நிலையத்தில் புத்தா ஏர் விமானம் இரவு தரையிறங்கியது.

அப்படி தரையிறங்கும்போது அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தைப் பாதுகாப்பாக நிறுத்தினர்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Leave a Reply