• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகார்த்திகேயனை அணுகிய தேசிய விருது பெற்ற இயக்குநர்

சினிமா

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதலில் இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனை தொடர்ந்து இயக்குநரை பட நிறுவனம் வலைவீசி தேடியது.

இதனிடையே, எங்களின் நாயகருக்கு பிடிக்கும் வரை கதையைக்கேட்டுக்கொண்டு இருப்போம் என கமல்ஹாசன் தெரிவித்தார். இதற்கிடையே, 'தலைவர் 173' படத்தை 'பார்க்கிங்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குவதாக தகவல் வெளியானது.

ஆனால் கடைசியாக 'தலைவர் 173' படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ராம்குமார் பாலகிருஷ்ணனின் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் அடுத்து எந்த நடிகரை கொண்டு படம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகி உள்ள 'பராசக்தி' வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply