• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆலோசகராகும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கை

உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்சிக்கு ஆலோசகராவதற்காக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர்.

கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட். 2013ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியா, நிதி, வெளிவிவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர் ஆவார். 

இந்நிலையில், கிறிஸ்டியா தனது பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக பொறுப்பேற்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்திருந்தார்.

ஜெலன்ஸ்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், இன்னொரு நாட்டின் ஆலோசகராக இருக்கமுடியாது என்றும், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவேண்டும் என்றும் கனடா எதிர்க்கட்சியினரிடையே குரல்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார் கிறிஸ்டியா.

கிறிஸ்டியா, உக்ரைன் வம்சாவளியினர் என்பதுடன், உக்ரைனில் ஊடகவியலாளராக தனது பணியைத் துவக்கிய அவர், 20 ஆண்டுகள் ஊடகத்துறையில் பெரும் பொறுப்புகள் வகித்தவர் என்பதும், ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக செயல்படுவதற்காக அவர் ஊதியம் எதுவும் பெறப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply