ட்ரம்பின் இரும்புக்கரத்தை உடைத்து தப்பிச்சென்ற வெனிசுலாவின் எண்ணெய் கப்பல்கள்
சினிமா
வெனிசுலாவில் ட்ரம்பின் வலுவான கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுடன் தப்பிச்சென்ற கப்பல்கள் அனைத்தும் கண்காணிக்கும் கருவிகள் எதையும் பயன்படுத்தாமல், பல ஆயிரம் மயில்களுக்கு அப்பால் காணப்படுவதுபோல் அமைப்புகளையும் திருத்தியுள்ளது.
மட்டுமின்றி, அமெரிக்காவின் கடற்படை அணிவகுப்பை சாமர்த்தியமாக மீறியுள்ளது. சமீபத்திய பல வாரங்களாக அந்தக் கப்பல்கள் அனைத்தும் வெனிசுலா துறைமுகங்களுக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், சனிக்கிழமை அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னர், இந்தக் கப்பல்கள் அனைத்தும் இரவோடு இரவாக தப்பியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் டிசம்பர் மாத நடுப்பகுதியில் வெனிசுலா மீது முற்றுகையை விதித்தார்.
மேலும், மதுரோ பதவியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து, வெனிசுலா மீதான எண்ணெய் தடை முழு வீச்சில் அமுலில் இருந்து வருவதாக அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நெருக்கடியான சூழலில், கப்பல்கள் அனைத்தும் துறைமுகத்தை விட்டுப் புறப்படும் அபாயகரமான முடிவை எடுத்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், குறைந்தது ஒரு டசின் கப்பல்களில் வெனிசுலாவின் 12 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஏற்றப்பட்டன.
அடையாளம் காணப்பட்ட 16 கப்பல்களில் பதினைந்து கப்பல்கள், ஈரானிய மற்றும் ரஷ்ய எண்ணெயைக் கொண்டு சென்றதற்காக அமெரிக்கத் தடைகளின் கீழ் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் நான்கு கப்பல்கள் செயற்கைக்கோள் தரவுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது. எஞ்சிய 12 கப்பல்கள் தொடர்பில் தகவல் இல்லை.
வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வெளியேறாமல் இருக்க அமெரிக்கா அமைத்துள்ள கடற்படை அரணை நவீன வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்று என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது, அமெரிக்காவின் பாதுகாப்பு அரணை சாமர்த்தியமாக உடைத்து கப்பல்கள் அனைத்தும் வெனிசுலாவில் இருந்து வெளியேறியுள்ளது.























