யூடியூபில் பராசக்தி டிரெய்லர் 5 கோடி பார்வைகளை கடந்து சாதனை
சினிமா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.
அதேநேரம் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 41 மில்லியன் (4.1 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆனால் இந்த டிரெய்லருக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரெய்லர் இதுவரை 50 மில்லியன் ( 5 கோடி) பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
திட்டமிட்டு புரமோஷன் செய்யப்பட்டதாலேயே இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.






















