டிரம்பை மகிழ்விப்பதற்காக சொந்த தெருக்களை நாசப்படுத்தும் போராட்டக்காரர்கள் - அயதுல்லா காமேனி
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதில் போராட்டக்காரர்கள்- பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 45 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.
இந்த நிலையில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஒரு மாபெரும் போராட்டத்திற்காக ஈரான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இரவு 8 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதற்கிடையே நேற்று இரவு தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன.
தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர். சில இடங்களில் பாதுகாப்பு படையினருடன் மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசுகையில் "டிரம்பை மகிழ்விப்பதற்காக போராட்டக்காரர்கள் தங்களுடைய சொந்த தெருக்களை நாசப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.























