கனடாவில் மீன்பிடிப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடா
வார இறுதி விடுமுறையை முன்கூட்டியே தொடங்கும் வகையில், சிலர் லேக் சிம்கோவில் பனியில் (Ice Fishing) மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இருப்பினும், ஏரியின் பல பகுதிகளில் பனியின் நிலைமை அபாயகரமாக இருப்பதால், மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு யார்க் பிராந்திய காவல்துறையின் கடல் பிரிவு (Marine Unit) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை அதிகாரிகளாக, பனி பாதுகாப்பானது என்று எங்களால் ஒருபோதும் உறுதி கூற முடியாது. ஒவ்வொருவரும் தாங்களே பனியின் உறுதியை சரிபார்க்க வேண்டும்,” என யார்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வாரம் லேக் சிம்கோவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜார்ஜினாவின் ரோச்சஸ் பொயின்ட் பகுதியில், காவல்துறையின் ஹெலிகாப்டரிலிருந்து எடுக்கப்பட்ட காணொளியில், சில இடங்களில் பனி இருப்பதும், சில இடங்களில் திறந்த நீர் (open water) காணப்படுவதும் பதிவாகியுள்ளது.
இத்தகைய சமனிலையற்ற பனி நிலைமை, இந்த காலகட்டத்தில் சாதாரணமானது என காவல்துறையும் பனி குடில் (Ice Hut) நடத்துனர்களும் கூறுகின்றனர்.
அடுத்த சில நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால், அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மீன்பிடியில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் எச்சரிக்கையாக மீன்பிடியில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.






















