• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தலவுட் தீவுகளுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று (10) பிற்பகல் 02.58 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் சுமார் 77 கிலோமீற்றர் (47.85 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply