• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் அழைப்பு

கனடா

கனடா பிரதமர் மார்க் கார்னி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கனடாவுக்கு வருமாறு அதிகாரப்பூர்வமாக அழைத்துள்ளார்.

நாம் ஒரே குடும்பம் எனக் குறிப்பிட்ட கார்னி, இருநாடுகளின் உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மோடி இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதாக கனடா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால், பயணத்திற்கான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த சந்திப்பு, அண்மைய காலங்களில் பதற்றம் காணப்பட்ட கனடா–இந்தியா உறவுகளை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வர முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமான குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்கின.

இந்த புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இவ்வாண்டுக்குள் இறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும்: சக்தி வளம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

மொத்தம் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 10 வர்த்தக ஒப்பந்தங்களும் அறிவிக்கப்பட்டன. 
 

Leave a Reply