• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் பெண்கள் இருவர் கைது

இலங்கை

நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25 கிராம் ஹெரோயினுடன் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 410,470 ரூபாய் பணத்துடன் மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 

Leave a Reply