• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போருக்கு மத்தியில் ஈரானுக்கு மற்றுமொரு அதிர்ச்சி - அச்சத்தில் மக்கள்

போர் அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை  ஈரான் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply