• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் மீதா அமெரிக்காவின் தாக்குதலுக்கு வருத்தத்துடன் ஆதரவு - கனடா

கனடா

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு “வருத்தத்துடன் ஆதரவு” அளிப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு தொடர்ந்து பலவீனமடைந்து வருவதை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல்கள் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்ததிலிருந்து முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கார்னி, இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

எங்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படவில்லை.இதில் பங்கேற்குமாறு எங்களிடம் கோரப்படவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்துடன் ஒத்துப்போவதாக தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார இறுதியில், பெரும்பாலான ஐரோப்பிய கூட்டாளிகள் எச்சரிக்கையுடன் நடந்துகொண்ட நிலையில், அமெரிக்க தாக்குதல்களுக்கு கார்னி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார்.

பின்னர் இத்தாக்குதல்களில் இஸ்ரேலும் இணைந்தது. இதனை சில லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து, எதிரியான நாடுகள் தொடர்பான சூழ்நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பும், நாட்டின் இறையாண்மையும் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 
 

Leave a Reply