• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீங்கள் அரசியல்வாதியா? நடிகரா?- சத்யராஜ் மீது பேரரசு தாக்கு

சினிமா

நடிகர் சத்யராஜுக்கு கண்டனம் தெரிவித்து இயக்குநர் பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சத்யராஜ் நீங்கள் யார் தியாகியா? அரசியல்வாதியா? திரைப்பட நடிகரா? சினிமா தொழிலில் இருந்து கொண்டு நடிகர்களை இனி மேலும் சிறுமைப்படுத்தி பேசாதீர்கள். உங்கள் மகளுக்கு தி.மு.க.வில் பதவி கிடைத்தது எப்படி? தியாகி சத்யராஜ் மகள் என்ற முறையிலா கிடைத்தது? பிரபல நடிகர் மகள் என்ற முறையில் தான் உங்கள் மகளுக்கு பதவி கிடைத்தது. உங்களை மேடையில் உட்கார வைத்ததின் காரணம் என்ன?

மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவரா? இல்லை மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியா? உங்களை மேடை ஏற்றியதற்கான தகுதி என்ன? நீங்கள் ஒரு பிரபல திரைப்பட நடிகர் என்று ஒரே காரணம்தான். ஒரு கட்சிக்கு ஆதரவாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம், அது தவறில்லை.

நடிகர்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் முட்டாள்கள் என்ற தோரணையில் ஒரு நடிகராய் இருந்து கொண்டு நீங்க பேசாதீர்கள். இந்த கருத்து உங்கள் முகத்திற்கு முன்னேயும் திரும்பும். திரைத்துறையை சார்ந்தவர்கள் பல கட்சிகளில் இருக்கலாம். ஆனால் எந்த துறை, எந்த தொழில் நமக்கு சோறு போட்டதோ அந்த தொழிலுக்கு எதிராக இருக்கக் கூடாது. இன்னொன்று சமூக நீதிக்கும் சனாதனத்திற்கும் போட்டியே வராது. ஏனென்றால் சனாதனம் என்பது சமூக நீதிதான்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சத்யராஜ் குறித்து பேரரசு வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகிறது.
 

Leave a Reply