#Vijay மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தினம் கொண்டாடுவதா? - விஜயை விமர்சித்த அமீர்
சினிமா
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். இதுதொடர்பாக மறுப்பு எதுவும் தெரிவிக்காத விஜய், சங்கீதா கூறியது உண்மை என்பதை மெய்பிக்கும் வகையில் நேற்று முன்தினம் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் திரிஷாவுடன் வந்தது அமைந்தது. இதுதொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, த.வெ.க.வின் மகளிர் தின விழா குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அமீர் வாட்ஸ்அப் ஸ்டேடசில், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா என விமர்சித்துள்ளார்.
தற்போது அமீர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.























