• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் 2 ஷூட்டுக்கு ரெடியாகும் ஷாருக் கான்

சினிமா

இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.

'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து புது நடிகர்களும் நடித்து உள்ளனர். இதனிடையே, 'ஜெயிலர் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்தப் படத்திற்கான அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் 'பாட்ஷா' என்று அழைக்கப்படும் ஷாருக் கான் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு முடித்துவிட்டாலும், ஷாருக்கானின் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ஷாருக்கான் குறித்த காட்சிகள் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் சில நாட்கள் வரை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
 

Leave a Reply