TamilsGuide

ஓமனில் கனமழையால் வெள்ளப்பெருக்கு - கேரளாவைச் சேர்ந்த இருவர் பலி- ஒருவர் மாயம்

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஓமனில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அல் பதினா கவர்னரேட் பிராந்தியத்தில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியபோது, கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் வாகனத்தில் செல்லும்போது அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் கேரள மாநிலம் திரிதலாவைச் சேர்ந்த யூசுப், ஷாம்லா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ரம்லா என்ற பெண் காணவில்லை.

இந்த நிலையில் ஓமன் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மாயமான பெண்ணை கண்டுபிடிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.
 

Leave a comment

Comment