TamilsGuide

என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே

பொதுக் கூட்டங்களில் மக்கள்திலகம்எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டசம்பவத்தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித்தவர்கள் யார் என்று தெரியாது; ரத்தம் கொடுத்தவர்களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அதனால்தான் ‘ரத்தத்தின் ரத்தமான’ என்று குறிப்பிடுகிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் மக்கள் திலகம் .
 

Leave a comment

Comment