TamilsGuide

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை

மலைப்பாம்புடன் நடனமாடும் காணொளி ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பெண், பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் 500,000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மார்ச் 20 அன்று கொழும்பில் நடைபெற்ற புத்தாண்டு தின அழகிப் போட்டியின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அதில் போட்டியாளர் ஒருவர் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இனமான மலைப்பாம்பை பயன்படுத்தியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர் புத்தளத்தில் ஒருவரிடம் இருந்து 25,000 ரூபாவுக்கு குறித்த மலைப்பாம்பை வாடகைக்கு எடுத்து, சம்பவம் நடந்த உடனேயே அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இத்தகைய முறையில் மலைப்பாம்பைப் பயன்படுத்துவது, கட்டளைச் சட்டத்தின் பிரிவு 30 (1)(a)-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் நீதிமன்ற எண் 05-இல் முன்னிலைப்படுத்தப்பாட்டார்.

அங்கு மேலதிக நீதிவான் அவருக்குப் பிணை வழங்கினார்.

அதேநேரம் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 

Leave a comment

Comment