TamilsGuide

ஈரான் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த G7 நாடுகள் வலியுறுத்தல்

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என G7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சாமானிய மக்களை பாதிக்கும் எரிபொருள், வணிக விநியோகம் மற்றும் வர்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளை குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment