TamilsGuide

நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியன 30 ரூபாயால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாயாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் அதிகரிப்பினால் இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

Leave a comment

Comment