1 பில்லியன் டாலரும், நாட்டிலேயே அழகான பெண்ணையும் தர வேண்டும் - துருக்கிக்கு உகாண்டா ராணுவ தளபதி வினோத நிபந்தனை
துருக்கி ஒரு பில்லியன் டாலர்களும், அவர்களின் நாட்டில் உள்ள மிகவும் அழகான பெண்ணையும் தனக்கு திருமணம் செய்து தர வேண்டும் என்று உகாண்டா ராணுவத் தளபதி முஹூசி கைனருகபா விசித்திர நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
முஹூசி கைனருகபா, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனியின் மகன் ஆவார். இவரே அந்நாட்டின் அடுத்த அதிபர் ஆவார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது ராணுவ தளபதியாக உள்ள முஹூசி கைனருகபா தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த சர்ச்சைக்குரிய நிபந்தனைகளை விவரித்துள்ளார்.
சோமாலியாவில் உகாண்டாவின் ராணுவப் பங்களிப்பிற்காக மேற்கூறிய அனுகூலங்களை அவர் கோரியுள்ளார்.























