கட் அண்ட் ரைட் ஆக சிவாஜியிடம் அதிரடியாக பேசிய ஸ்ரீதர்.
சினிமா
இந்த செய்தியை பழைய இதழ் ஒன்றில் இயக்குனர் ஸ்ரீதர் சொல்லி இருக்கிறார் அதை படிக்க நேர்ந்தது.
சிவாஜிகணேசன் தனது மகன்களான பிரபு ராம்குமார் பெயரில் பிரபு ராம் பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்க தயார் நிலையில் இருந்திருக்கிறார்.
இயக்குனர் ஸ்ரீதரை அழைத்து ஸ்ரீதர், நான் ஆங்கிலத்தில் ஒரு படம் பார்த்தேன் படத்தோட பெயர் singer not the song இந்த படத்துல நான் நடிக்கலாம்னு இருக்கேன் நீதான் டைரக்ட் பண்ற என்றாராம் சரிணே என ஸ்ரீதரும் கூறிவிட, அந்த படத்தை பார்க்கலாமா என்றிருக்கிறார்.
இன்னைக்கு நைட் வீட்டுக்கு வா, அந்த படத்தோட பிரிண்ட் கொண்டு வர சொல்லி இருக்கேன் அங்க பார்த்துடலாம் என்றாராம். சரி என்று வீட்டுக்கு போய் இரவு நேரத்தில் சிவாஜி கணேசனும், ஸ்ரீதரும் அந்த படத்தை பார்த்து இருக்கிறார்கள். சிவாஜி மிக ஆர்வமாக தீவிர ஈர்ப்புடன் அந்த படத்தை பார்த்தாராம். ஸ்ரீதருக்கோ படம் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லையாம், இந்த படத்தையா நல்லா இருக்குன்னு சொல்றாரு எப்படி சொல்றாரு என படம் பார்க்க முடியாமல் நெளிந்திருக்கிறார். ஆனால் சிவாஜிக்கு படம் ரொம்ப பிடித்து போய், எப்படி இருக்கு பாரு கேரக்டர் பவர்புல்லா இல்ல நாளைக்கே பூஜை போட்டுடலாம் என்றிருக்கிறார். ஸ்ரீதர் எப்படி இருக்கு படம் நல்லா இருக்குல்ல, நீதான் டைரக்சன் பண்ற, நாளைக்கு அம்மா கையால அட்வான்ஸ் உனக்கு தரலாம்னு இருக்கேன் என சொன்னாராம்.
ஆனால் ஸ்ரீதரோ தயங்கி தயங்கி நின்றிருக்கிறார். உன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ பிரமாதமா எடுத்துடுவேன்னு எனக்கு தெரியும் என சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஸ்ரீதருக்கோ எப்படி பிடிக்கலை என சொல்வது என அறியாமல் நிற்கையில் அவரின் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட சிவாஜி என்னப்பா சொல்லு என்றிருக்கிறார்.
ஒண்ணும் இல்லனே உண்மையில் படம் நல்லா இல்ல, இந்த படத்தில் உங்கள் கேரக்டர் நன்றாய் அமையும் ஆனால் ஒட்டுமொத்தமாய் பார்க்கும்போது படம் நல்லா இல்லையே எடுத்தால் கண்டிப்பாக ஓடாது, அதனால் நான் டைரக்ட் பண்றேன்னு முன் வரக்கூடாது அது தவறு. எப்ப என் மனதிற்கு அது பிடிக்கவில்லையோ அதை மீறி அதை டைரக்ட் செய்கிறேன் என நான் வருவது தவறுதான், அது உங்களை ஏமாற்றுவதாகும், நான் சைன் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சும் அதில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு இயக்குவது சரியாக படவில்லை அதனால் மன்னிச்சிடுங்க என சொன்னாராம். பரவாயில்லப்பா விடுப்பா, இந்த கதை இல்லனா வேற கதை வேற படம் அமையும் என சிவாஜிக்கு அந்த படத்தில் விருப்பம் இருந்தாலும் நேர்மையாக விலகிக்கொண்ட ஸ்ரீதரை பாராட்டினாராம்.
Abiram Arunachalam






















