• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதுவே உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் வெற்றி

சினிமா

உலகம் சுற்றும் வாலிபன் : தமிழ் திரையுலகின் வரலாறு படைத்த திரைப்படங்களின் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை இன்றும் தக்க வைத்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம். 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் திரைப்பட உலகின் சூழலில் வெளிநாட்டில் நடப்பது போன்று கதை அமைத்து அதை அந்த இடங்களுக்கே சென்று படபிடிப்பு நடத்தி படத்தை வெளியிடுவது என்பது உலக அதிசயங்களில் ஒன்றாக தான் இருந்தது. இந்த அதிசயத்தை நடத்தி காட்டிய மூன்றெழுத்து மந்திரம் MGR. அந்த படபிடிப்பின் அனுபவத்தை MGR அவர்கள் "திரை கடலோடி திரைப்படம் எடுத்தோம்" என்ற தலைப்பில் பொம்மை இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரை தொடராக எழுதினார். அதை படித்த போது தான் அடுத்த தலைமுறையின் திரையுலகினருக்கு வெளிநாட்டில் படபிடிப்பு நடத்துவது என்றால் என்ன என்று தெரிந்தது என்று கூறினாலும் அது மிகையாகாது. ஜப்பானில் தனக்கு இரவு பகல் பாராமல் காரோட்டிய நண்பர் சீட்டோ என்பவர் முதல் இந்த திரைப்படத்தை எடுக்க தனக்கு உதவி செய்த அத்தனை போரையும்  இந்த தொடரின் மூலம் அவர் நினவுகூர்ந்தார்.அந்த தொடரின் முடிவுரையில் அவர் கூறியது இது தான்.

"மனிதனாக இவ்வுலகில் ஒரு முறை தான் பிறக்கிறோம்  இந்த பிறவியில் இறைவன் படைத்த உலகை முழுவதுமாக பார்த்து ரசிப்பது என்பது எல்லோர்க்கும் இயலாத காரியம். தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ரசிகனும் ஜப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை பார்த்த உணர்வை இந்த படத்தின் மூலம் பெறுவான் என்றால், அதுவே உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் வெற்றி என்று சொல்லுவேன்"

Sukumar Shan

Leave a Reply