• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவை மிரள வைத்த ஈரானின் ஒற்றை எச்சரிக்கை

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஹோர்முஸ் நீரிணையில்; நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கண்ணிவெடி அகற்றும் கப்பல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.

"அமெரிக்கக் கண்ணிவெடி அகற்றும் கப்பல் தனது நிலையில் இருந்து சற்றும் நகர்ந்தாலும், நாங்கள் நிச்சயமாகத் தாக்குதல் நடத்துவோம்" என்று, இஸ்லாமாபாத்துக்கு வந்திருந்த அமெரிக்கப் பிரதிநிதிகளிடம், எச்சரித்ததாக காலிபாஃப் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, கப்பலைத் திருப்பி அனுப்ப ஆணையிட 15 நிமிடங்கள் கால அவகாசம் கேட்ட அமெரிக்கத் தரப்பு, பின்னர் அந்தக் கோரிக்கையை ஏற்று கப்பலைத் திருப்பி அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை, ஈரான் குடியரசின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய காலிபாஃப், அங்கு கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள் "போர்நிறுத்தத்தை மீறும் செயல்" என்று வர்ணித்துள்ளார்.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகையை "அறிவற்ற மற்றும் முதிர்ச்சியற்ற முடிவு" என அவர் விமர்சித்துள்ளார்.
 

Leave a Reply