• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் நடித்தது பெருமையான விஷயம் - கெட்டிகா சர்மா ... 

சினிமா

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சி நடனக்காரரான கெட்டிகா சர்மா, ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் 'மீசைய முறுக்கு-2' படத்தில் நடித்திருப்பதின் மூலம், தமிழ் சினி மாவிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார். படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'ஆரா பத்துக்கு பத்து...' என்ற பாடலுக்கு அவர் போட்ட நடன அசைவுகள் பெரியளவில் 'டிரெண்டிங்' ஆகி வருகிறது.

இளம்பெண்கள் ஏராளமானோர் அந்த 'ஸ்டெப்'களை போட்டு ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருக்கும் கெட்டிகா சர்மா, "தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமைக்குரியவர்கள். மொழி பாகுபாடு பார்க்காமல், திறமையான அத்தனை கலைஞர்களையும் கொண்டாடி தீர்ப்பதில் வல்லவர்கள். தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம்". என்றார்.
 

Leave a Reply