• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இலவச உணவுப் பொருட்களுக்கான கோரிக்கை அதிகரிப்பு

கனடா

கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக அல்பேர்ட்டா மாகாணத்தின் கால்கரி (Calgary) பகுதியில், 'குரு நானக் இலவச சமையலறை' (Guru Nanak Free Kitchen) என்ற தொண்டு நிறுவனம் வழங்கிய இலவச உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுமார் 80,000 பவுண்ட் உருளைக்கிழங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்ட இந்த நிகழ்வில், தங்களது மாதாந்த வரவுசெலவுத் திட்டத்தைச் சமாளிக்க முடியாமல் தவிக்கும் பல குடும்பங்கள் கலந்துகொண்டன.

புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, மளிகைப் பொருட்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு 4.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

வருமானம் உயராத நிலையில் பொருட்களின் விலை மட்டும் அதிகரிப்பது சாதாரண மக்களைப் பாதிப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மாகாண அரசு பெரும் வர்த்தக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, உள்ளூர் அளவில் விலைகளைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

இவ்வாறான இலவச உணவு விநியோகங்கள் தங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தருவதாக வரிசையில் காத்திருந்த மக்கள் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply