• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பைலட் பிரேம் நாத்

சினிமா

1978 ,லே தினத்தந்திலே ஒரு  விளம்பரம் வருது. சினிமா விளம்பரம். 
சிவாஜி சினிமா விளம்பரம். 
விரைவில் வருகிறது.
"பைலட் பிரேம் நாத் ".
இந்தியா இலங்கை கூட்டுத் தயாரிப்பு , இலங்கை நடிகை மாலினி பொன்சேகா ஹீரோயின் ,
மாஸ்அண்ட் க்ளாஸ் டைரக்டர் திருலோக்சந்தர்தான் படத்தை  ரெடி பண்ணித் தர்றவர்ன்னும் அந்த விளம்பரம் காட்டுச்சு.
படம் நம்ம மைண்ட்டுலே 'கிண்'ன்னு ஏறர்துக்கு ஒரு காரணம் இருக்கு. அதான் சிவாஜியோட மாஸான மிரட்டல் லுக்.டார்க்கான ஊதா நிற பைலட் டிரஸ்சும் , கண்ணுலே மாட்டுன ரவுண்ட் கூலிங்கிளாசுமா சிவாஜி கொடுத்த போஸ் ரசிகர்களை  நல்லாவே உசுப்பி விட்டுடுச்சு.
தங்க பதக்கம் படத்துக்கு பின்னாலே இந்த 'லுக் அண்ட் கெட் அப் 'பெரிய வேலை செய்யப் போகுதுன்னு ரசிகர்களே பில்டப் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. வரிசையா பேப்பர்லே வந்த போட்டோ ஆல்பங்களும் ,நியூசும் அந்த ஆசைகளுக்கு ரொம்பவே தீனி போட்டுச்சு.
சிவாஜி பைலட் லுக்குலே அட்டகாசம் பண்றார்,ரெண்டு நாட்டோட கூட்டுத் தயாரிப்பு வேற , திருலோக் பண்ற வேலை ,இதில்லாமே ஒரு இளசு நடிகர் நடிகை கூட்டம் வேற உள்ள இறங்குதுன்னு தினுசு தினுசா பேச்சுகள் வேற..
படம் ரிலீசாகற தேதி வரைக்கும் 
பிளைட் மாதிரி பறக்குது இந்த படம் பத்தின ஆர்வங்கள்.
நம்ம ஊரு பொள்ளாச்சி பக்கத்துலே கிராமம்.டவுனுக்கு தான் வரணும். புது படம் பாக்க.
அப்போ பேமசான தியேட்டர் கலைமகள்.ரசிகர்களுக்கு சிவாஜி தியேட்டர் மாதிரி.
படம் ரிலிசான நாள்.எனக்கு அப்போ எட்டு வயசு. படம் ரிலீசாகி நாலஞ்சு நாள் கழிச்சுத்தான் அம்மா கூட்டிட்டு போவாங்க. வீட்டுலே எல்லா பிரதர்சும் சிவாஜி பேன்ஸ். அவங்க பிரெண்ட்சும் அப்படியே. அவங்க வந்து கொட்டறைதைத்தான் நாம கேக்கணும்.அந்த மாதிரி கொட்டுன விஷங்கள்  நிறைய மனசுக்குள்ளே இருக்கு. 
அதில இருந்துதான் இப்போ எடுத்து விடறது.

காலைக்காட்சி ரசிகர் மன்ற ஸ்பெசல் ஷோ.அதுக்கு அடுத்த காட்சிதான் பாக்க முடியும் .தியேட்டர் பக்கம் போனா ரெண்டு நாள் ஷோ பாக்கற அளவுக்கு கூட்டம். சைக்கிள் டிக்கட் அது பெரிய வரிசைலே நிக்குது. நாலுலே ஒரு பங்குதான் டிக்கட் கேரண்டி. கவுண்ட்டர் வரிசைலே அதே மாதிரி. டிக்கட் கிடைக்காதுன்னு தெரியும். எதுக்கு நிக்கறாங்கண்ணு புரியலே. அவங்க நிக்கறது அன்னைக்கு படம் பாத்தாகணும். அந்த மாதிரி ரசிகர்கள்.இந்த ஷோ டிக்கட் இல்லையா ,அடுத்த ஷோ ,அதுவும் இல்லைன்னா அடுத்த ஷோ .அந்த நாளு அதுக்குத்தான்.. பைலட் பிரேம்நாத்துக்குண்டான நாளு அது அவங்களுக்கு.
சில பேரு இருக்காங்க. சிவாஜி பத்தி பேச ,சிவாஜி பத்தி பேசுனா  கேக்கன்னு ஒரு கூட்டம் இருக்கும். இவங்களுக்கு படம் பாக்கறத விட சிவாஜி பத்தின செய்திகளை கேக்கறதும் பரப்பறதும் தான் இன்ட்ரஸ்ட்டே.
ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள். வீதிக்கு வீதி ரசிகர் மன்றம் இருந்த காலம் அது. தியேட்டர் பூராவும் நோட்டீஸா இருக்கும். 
எல்லா ரசிகர் மன்றங்களும் ஏதோ ஒரு வேலையை செஞ்சிருப்பாங்க.
இது அப்ப சிவாஜியோட எல்லா படங்களுக்கும் கலைமகள் தியேட்டர்லே நடந்த அலப்பறைகள் தான். பைலட் பிரேம்நாத் படத்துக்கும் இதே சம்பவங்கள் தான். கொஞ்சம் கூடுதலா இருந்துச்சு. 
முதல் ஷோ முடிஞ்சு ரசிகர்கள் வர்றாங்க. பொதுவா சிவாஜி ரசிகர்கள் நேர்மையான விமர்சனங்களைத்தான் சொல்லுவாங்க. இப்ப இருக்கற விசிலடிச்சான் குஞ்சுகள் மாதிரி  படம் எப்படி குப்பையா இருந்தாலும் வேற லெவல்னெல்லாம் திரிக்க மாட்டாங்க. 
பைலட் பிரேம் நாத் படத்தை பத்தி இன்னைக்கு நாம என்ன பேசறமோ அதைத்தான் சொன்னாங்க. திரைக்கதை கொஞ்சம் வீக்னு. நடிகர்திலகம் Gun மாதிரி இருக்கார் ,Who is black sheep  பாட்டுக்கு தியேட்டர் அலறுனது  எல்லாமே சரியான மேட்டரா பேசப்பட்டுச்சு.
பெரிய லெவல் படமா Introduce ஆன படம் ,சிவாஜி மாஸ் ,படம் நூத்துக்கு 50 தை தாண்டின படமா விமர்சனக் கலவைலே தெரிஞ்சது.
படத்துலே சிவாஜி இன்ட்ரோ சீன் அதகளமா ஆரம்பிச்சது எல்லாம் இன்னும் மறக்க முடியலே. 

 

செந்தில்வேல் சிவராஜ்


 

Leave a Reply