• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தில் பிரதமர் விசேட வழிபாடு

இலங்கை

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்றுமுன்தினம்( 26 ஆம் திகதி ) வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார்.

முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான சங்கநாயகருமான வணக்கத்திற்குரிய கொபவக தம்மிந்த நாயக தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர், அதன்பின் வரலாற்று சிறப்புமிக்க கிரிவெஹெரயில் மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன்பின்னர், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம விஷ்ணு மஹா தேவாலயத்தின் மாலை நேர பூஜையில் கலந்துகொண்ட பிரதமர்,  கதிர்காமம் ஸ்ரீ அபிநவாராம விஹாரஸ்தானத்தின் விஹாராதிபதியும், ருஹுணு மாகம்பத்துவவின் பிரதான ஆதிகரண சங்கநாயகருமான சாஸ்திரபதி வணக்கத்துக்குரிய கபுகம சரணதிஸ்ஸ நாயக தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன, மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர,  ஹொரண வாசனா பேக்கர்ஸ் நிறுவனத்தின் அதிபர் தயானந்த போம்புவல,  கதிர்காம பிரதேச சபையின் தலைவர் எச். எம். ஹேரத்,  ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்க ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply