• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரு ஷியாம் சுந்தர், எம்.ஜி.ஆரது  ஆஸ்தான சண்டை பயிற்சியாளர்

சினிமா

எம்.ஜி.ஆர். படங்களில் 'திருடாதே' முதல்   50 க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணி புரிந்தவர் ஷியாம் சுந்தர். நல்ல தோற்றமுடைய இவர் நடிப்பதற்காக சினிமாவிற்கு வந்தவர். ஆனால் சண்டைப் பயிற்சியாளராகிவிட்டார். 
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வரான பின்
ஷியாம் சுந்தர் படிப்படியாக சினிமாவைவிட்டு விலகி பெங்களூரு  போய்விட்டார். 
ஒரு நாள் புகைப்படக் கலைஞர் 
திரு ஆர். என். நாகராஜராவ் அவர்களிடமிருந்து எனக்கு போன் 
வந்தது, "உங்களுக்கு ஒரு அதிசயம் 
காத்திருக்கிறது. உடனே வாருங்கள்"  என்று.  
அதன்படி நேரில் சென்றால், அங்கு 
திரு ஷியாம் சுந்தர் எனக்காக காத்திருந்தார். ராவ் அவரது நீண்ட கால 
நண்பர்களில் ஒருவர். ஏற்கனவே அவரிடம்  ஷியாம் சென்னை வந்தால், தெரிவிக்கும்படி சொல்லியிருந்தேன். 
திரு ஷியாம் சுந்தர், எம்.ஜி.ஆரது     
ஆஸ்தான சண்டை பயிற்சியாளரல்லவா, பழகும் தன்மையில் மனதை நெகிழ வைத்தார்.
ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது உறவினர் இல்லத்தில் சந்தித்து பேசி 
படங்கள் எடுத்து 'தினமலர்' தீபாவளி மலரில் எழுதினேன்.
ஷியாம் சுந்தர், சிவாஜி நடித்த
'சிவந்த மண், தியாகம் படங்களிலும் 
பணி புரிந்திருக்கிறார் எம்.ஜி.ஆரின் 
அனுமதி பெற்றே.       
Ithayakkani S Vijayan  with Plato Rajagopalan
 

Leave a Reply