• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.

குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மற்றொரு பேருந்திற்கு வழிவிட முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், சாரதியும், உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதவேளை, காயமடைந்தவர்கள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply